பருந்தாகுது ஊர் குருவி திரைவிமர்சனம்

 பருந்தாகுது ஊர் குருவி திரைவிமர்சனம்

நிஷாந்த் ரூஸ்ஸோ, விவேக் பிரசன்னா, காயத்ரி, “ராட்சசன்” வினோத், கோடாங்கி வடிவேல், கெளதம், ராஜேஷ், ஆனந்த், ஆதிக் நடிப்பில், லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் தயாரிப்பில், தனபாலன் கோவிந்த் ராஜ் இயக்கியுள்ள படம் “பருந்தாகுது ஊர் குருவி”.

எதை பேசுகிறது இப்படம்?

ஒரு மனிதன் அங்கீகரத்திற்காகவும், அடிப்படை மரியாதைக்காகவும் எப்படி ஏங்குகிறான்? அது கிடைக்காத காரணத்தால் என்ன செய்கிறான்? புகழ் போதை ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதை இப்படம் பேசுகிறது.

கதைப்படி,

நடிகை ஒருவரின் வீட்டில் ரெய்டு நடக்கிறது, அதனால் அவரின் கணவன் விவேக் பிரசன்னாவை மறைவாக இருக்கச்சொல்லி ஒரு இடத்திற்கு அனுப்பிவிடுகிறார். அங்கு விவேக் பிரசன்னாவை யாரோ கொலை செய்கின்றனர். ஆனால், எப்படியோ அவர் உயிருடன் இருக்கிறார்.

விவேக் பிரசன்னா இறந்துவிட்டதாக நினைத்த நிஷாந்த் ரூஸ்ஸோ அவர் உயிருடன் ஷாக் ஆகிறார். மேலும், காயத்ரியின் பேச்சை கேட்டு பணத்திற்காக விவேக் பிரசன்னாவை காப்பாற்ற முயற்சி செய்கிறார் நிஷாந்த்.

விவேக் பிரசன்னாவை கொலை செய்ய நினைத்தது யார்? நிஷாந்த் ரூஸ்ஸோ பிரசன்னாவை காப்பாற்றினாரா? என்பதே இரண்டாம் பாதி.

நிஷாந்த ரூஸ்ஸோ மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் தான் படத்திற்கு பலம். இருவரின் நடிப்பும் அட்டகாசம்.

உடன் நடித்திருந்த கலைகள் அனைவரும் கொடுத்ததை சிறப்பாக செய்துள்ளனர்.

தனபாலன் இயக்கத்தில் சற்று சறுக்கியிருக்கிறார். திரைக்கதை தொய்வு அதற்கு ஒரு காரணம்.இருந்தாலும் நல்ல லொகேஷன் செலெக்ட் செய்து நம்மை அங்கு ஒரு பயணமே ஏற்பாடு செய்து கூடி சென்றது தான் சிறப்பு.

ரஞ்சித் உன்னி இசை கேட்கும் ரகம். பிஜிஎம் நல்ல ரீச் இருக்கும்.

அஸ்வின் நியோலின் ஒளிப்பதிவு காடுகளின் அழகை நமக்கு வெளிக்காட்டுகிறது.

பருந்தாகுது ஊர் குருவி – குருவியாக தான் இருக்கிறது.

Related post