N4 திரைவிமர்சனம்

 N4 திரைவிமர்சனம்

தர்மராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் குமார் இயக்கத்தில் மைக்கேல் தங்கதுரை, காப்ரியேலா, விஷ்ணு தேவி, அனுபமா குமார், அக்ஷய் கமல், அப்சல் அகமத், பிரக்யா நக்ரா, வடிவுக்கரசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “N4”.

எதைப் பேசுகிறது இப்படம்?

மனிதனின் வாழ்க்கையில் கர்மாவின் பாதிப்பு மற்றும் பலன் என்ன? என்பதை வடசென்னையின் வாழ்வியலை முழுமையாக வெளிக்காட்டி பேசுகிறது.

கதைப்படி,

சூர்யா, சௌந்தர்யா, கார்த்தி, அபிநயா என நால்வரும் சிறுவயது முதல் ஒன்றாக வடிவுக்கரசியிடம் வளர்கின்றனர். மிகவும், நேர்மையாகவும், சந்தோஷமாகவும் இவர்கள் வடசென்னையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களோ சம்பளம் குறைத்து தந்த காரணத்தால் அங்குள்ள ரவுடி ஒருவரிடம் பகை வளர்த்துவிடுகின்றனர்.

மறுபுறம், அதிக பணம், சரக்கு மற்றும் பார்ட்டி என விஜய், ஸ்வாதி மற்றும் அவர்களின் நண்பர்கள் என அதே வடசென்னையில் லூட்டி அடித்து வருகின்றனர். இவர்கள் என்னதான் லூட்டி அடித்தாலும், நல் உள்ளம் கொண்டவர்களாகவும், ஒரு சிறுவன் வலிப்பில் தவித்து வந்த பொது அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவியும் செய்கின்றனர்.

அப்போது, ஒரு நாள் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தோ துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. திடிரென அபிநயாவின் வயிற்றில் குண்டடி பட்டு கீழே விழுகிறாள்.

அபிநயாவை சுட்டது யார்? விஜய் மற்றும் ஸ்வாதி வாழ்க்கையில் என்ன திருப்பங்கள் நடந்தது? ரவுடிக்கும் சூர்யாவின் குடும்பத்திற்கும் இருந்த பகை என்ன ஆனது? என்பது படத்தின் இரண்டாம் பாதி.

சூர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை அளவான நடிப்பை கொடுத்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.

காப்ரியேலாவை பற்றி பேசியே ஆகவேண்டும், அவரின் நடிப்பு கைத்தட்டலுகுரியது. சூர்யாவிடம் சண்டையிடும் காட்சி, குடும்பத்திற்காக அழுகும் காட்சி என அனைத்திற்கும் பெர்பார்ம் செய்து ஸ்கொர் செய்துள்ளார் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்த காப்ரியேலா.

ஊமைப் பெண்ணாக நடித்திருக்கும் விஷ்ணு தேவி கொடுத்த சேர்த்துள்ளார். அனுபமா குமார் அனுபவ நடிப்பை கொடுத்த்துள்ளார்.

அக்ஷய் கமல், அப்சல் அகமத், பிரக்யா நக்ரா, வடிவுக்கரசி என உடன் நடித்த அனைவரும் படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

லோகேஷ் குமார் சரியான கதை களத்தை தேர்வு செய்து இயக்கம் செய்துள்ளார். வடசென்னையிலுள்ள அத்தனை விதமான மக்களின் வாழ்க்கை போக்கையும் காட்சிப்படுத்தி வடசென்னை மக்களின் நல்லுலத்தை பதிவு செய்கிறார்.

ஆனால், திரைக்கதையில் கவனம் செலுத்த தவறியிருக்கிறார். 2 மணி நேரம் 20 நிமிடம் என்பதை குறைத்து 2 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இக்கதையை பொருத்தியிருந்தால் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும்.

திவ்யனின் ஒளிப்பதிவு சிறப்பு. பால சுப்பிரமணியனின் இசை படத்தின் ஓட்டத்திற்கு தூணாக நின்றது. பாடல்கள் கேட்கும் ரகம்.

N4 – வாழ்க்கையின் யதார்த்தம்.

Related post