Poochandi Movie Review – Fulloncinema

 Poochandi Movie Review – Fulloncinema
Digiqole ad

பூச்சாண்டி என்றதும் நம் நினைவுக்கு வருவது சிறு வயதில் நம் அம்மா அல்லது பாட்டி நம்மை பயமுறுத்தி சாப்பிட வைக்க போராடும் கதைகளை கேட்டிருப்போம் . ஆனால் உண்மையில் பூச்சாண்டி என்பது யார்?அவர்களின் பின்புலத்தை அறிய நிச்சயம் இந்த படத்தை தவறாது பார்க்க வேண்டும். இந்த திரைப்படம் தமிழில் எடுக்கப்பட்ட மலேசியா திரைப்படம். பழைய நாணயங்களை சேகரிக்கும் ஒருவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஆவிகளிடம் பேசும் விளையாட்டை விளையாடுகிறார்கள்,இந்த விளையாட்டு போக போக எவ்வளவு ஆபத்தானது என்பதை உணருவர்தற்குள் அவர்களில் ஒருவர் இறந்து விடுகிறார். அமானுஷ்ய விஷயங்களை தேடி செல்லும் இன்னொரு நாயகன் இவர்களின் இந்த அமானுஷ்ய அனுபவத்தின் அடிப்படையில் அதன் முடிவை அவர்களுடன் சேர்ந்து கண்டுபிடிக்க தொடங்குகிறார்,அதற்கு பிறகு அவர்களுக்கு நடக்கும் திக் திக் நிமடங்கள் தான் திரைக்கதை.இறுதியில் அவர்கள் நிலைமை என்ன ஆனது என்பது வியக்க வெக்கும் வரலாற்றை பின்புலமாக வைத்து கொடுத்ததில் இயக்குனருக்கு ஒரு மிக பெரிய பாராட்டு.

படத்தின் நாயகன் இயக்குனர் JK விக்கி என்றே சொல்லலாம், படத்தின் திரைக்கதை கொஞ்சம் வேறு பாதையில் பயணித்தாலும் அலுப்பு தட்ட கூடிய கதையை மிகவும் சுவரிசயமாக கொண்டு செல்கிறார்.படத்தில் நமக்கு தெரியாத பல வரலாற்று உண்மைகளை நம் கண்முன் காட்சிகளாக கொண்டு வந்து நிறுத்துகிறார். பூச்சாண்டி என்பவர்கள் உண்மையில் நம்மை பயமுறுத்தி வெய்க்க சொல்லப்பட்ட கதைகள் அவர்கள் உண்மையில் யார் என்பதை உடைக்கும் இறுதி காட்சி நிச்சயம் பரபரப்பாக இருக்கும். படத்தின் இரண்டாம் பாகத்தை நிச்சயம் இன்னும் மிக பெரிய பொருட்செலவில் எடுக்கலாம். படத்தின் நடிகர்கள் அனைவரும் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவாளர் அசலிஷம் பின் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கிறார். படத்தில் பாடல்கள் இல்லாதது மிக பெரிய பலம்,பின்னணி இசை நன்றாக உள்ளது. மொத்தத்தில் சிறிய தயாரிப்பில் உருவாகி இருந்தாலும் இயக்குனரின் மிக பெரிய உழைப்பு படத்தில் தெரிகிறது,நிச்சயம் இத்திரைப்படம் தமிழில் வெளிவந்து தமிழ்நாட்டில் மிக பெரிய அடையும் என்ற நம்பிக்கை படக்குழுவுக்கு வர வாழ்த்துகள்.

பூச்சாண்டி : நிச்சயம் பார்க்கலாம்.

Digiqole ad
Spread the love

Related post