பவர் ஸ்டாருடன் இணையும் பிரியங்கா மோகன்

 பவர் ஸ்டாருடன் இணையும் பிரியங்கா மோகன்

“டாக்டர்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை தான் பிரியங்கா மோகன். அதன் பின், “எதற்கும் துணிந்தவன்”, “டான்” போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப் பிரபலமானார்.

தற்போது, பிரியங்கா அருள் மோகனுக்கு தெலுங்கு திரையுலகில் பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் நடிகை ‘கேங்க்லீடர்’ மற்றும் ‘ஸ்ரீகரம்’ போன்ற தெலுங்கு படங்களில் ஏற்கனவே நடித்து நல்ல வரவேற்பை பெற்றாலும், அவரது நடிப்பு கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

தற்போது, மீண்டும் அவருக்கு பெரிய வாய்ப்பு ஒன்று தெலுங்கு திரையுலகில் கிடைத்துள்ளது.

இயக்குநர் சுஜீத் இயக்கத்தில், பவன் கல்யாண் நடிக்கும் ‘ஓஜி’ படத்தில் பிரியங்கா அருள் மோகனை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் படக்குழு.

“ஓஜி” படத்தின் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் தொடங்கும் நிலையில் டி.வி.வி தனய்யா இப்படத்தை தயாரிக்கிறார்.

கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட இப்படமானது ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Related post