அயோத்தி”; படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!

 அயோத்தி”; படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் அயோத்தி.,

இப்படம் விமர்சன ரீதியாக நல்லதொரு வெற்றியை பெற்ற நிலையில், இத்திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

படத்தினை பலரும் பாராட்டி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் வாழ்த்தியுள்ளார்.

துகுறித்து ட்விட்டர் பக்கத்தில், “ அயோத்தி…

நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.

முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.

தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!” என்று கூறியுள்ளார்.

Related post