ரூட் நம்பர் 17 விமர்சனம்

 ரூட் நம்பர் 17 விமர்சனம்

இயக்கம்: அபிலாஷ் தேவன்

நடிகர்கள்: ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா, அகில் பிரபாகர், அனுஸ்ரீ போத்தன், ஜார்ஜ், நிகில் அமர், அருவி மதன்

இசை: ஒசேப்பச்சான்

ஒளிப்பதிவு: பிரசாந்த்

கதைப்படி,

தென்காசி அருகே உள்ள ஒரு மலைப்பகுதிக்கு விடுமுறையை கழிக்க பயணம் செல்கின்றனர். அங்கேயே செட் அமைத்து இரவு தங்குகிறார்கள்.

காதல் ஜோடியை ஒரு காட்டுவாசி கடத்தி, குகைக்குள் அடைத்து விடுகிறான். காதல் ஜோடியை தேடி போலீஸ் காட்டுக்குள் இறங்குகிறது.

இறுதியில் காவல்துறையினர் ஜோடியை காப்பாற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஜித்தன் ரமேஷ், இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார். எந்த நடிகரும் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்து அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து படத்தில் வியக்க வைத்தவர் அஞ்சு பாண்டியா. பாறையில் வழுக்கி, சேறும் சகதியாக அக்கதாபாத்திரத்திற்கு எந்த அளவிற்கு மெனக்கெடல் கொடுக்க முடியுமோ அதை தாண்டியே கொடுத்து அப்ளாஷ் வாங்குகிறார் அஞ்சு பாண்டியா.

மற்ற நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

த்ரில்லர் கதையாக நகர்ந்து படம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் எடிட்டிங்க் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

ஆங்காங்கே எட்டிப் பார்த்த லாஜிக் ஓட்டைகளை டீம் கவனித்திருந்திருக்கலாம். முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் இல்லாமல் போனது சற்று ஏமாற்றம் தான்.

ரூட் நம்பர் 17 – த்ரில்லர் விரும்பிகள் ஒருமுறை ரசித்துவிட்டு வரலாம் – 2.75/5

Related post