Sinam Kol Movie Review
சினம் கொள் முழுக்க முழுக்க இலங்கையில் எடுக்கப்பட்ட தமிழ் படம் இந்த சினம் கொள். இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் என் ர் ரகுநாந்தன் இசை அமைத்துள்ளார். படத்தின் கதை இலங்கையில் நடக்கிறது, நாயகன் 2009 ஆண்டு சிங்கள ராணுவம் ஈழ தமிழர்கள் மீது நடத்திய போரின் போது இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து தற்போது தான் வருகிறார். அவரது ஊருக்கு சென்று பார்க்கும் போது அவரது மனைவி மற்றும் மகளை காணவில்லை அவர்களை தேடி கண்டுபிடிக்கிறார், பிறகு மூவரும் சேர்ந்து வாழ நினைக்கும் போது ஏற்படும் திருப்பங்கள் தான் மீதி கதை.
நாயகன் அரவிந்தன் கதையின் நாயகனாக பொருந்தி போகிறார்,சிறையில் இருந்து விடுதலை அடைந்த அவர் தனது ஊர் மாறி உள்ளதை பார்க்கும் போது மற்றும் தனது மகளை முதல் முறையாக பார்க்கும் போது சரி நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்.நாயகி நர்வினி நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.படத்தின் மற்ற கலைஞர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு நம்மை இலங்கைக்கே கொண்டு சென்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் உள்ள தற்போதைய நிலை மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பட்டு கொண்டிருக்கும் அவலங்கள் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.
சினம் கொள் : தரம்
தொழில் நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார்
இசை – N.R.ரகுநந்தன்
வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன்.
எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம்.
கலை – நிஸங்கா ராஜகரா.
சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம்.
தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ்
தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.
கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்
படம் வருகிற ( 14.01.2022 ) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
OTT link
https://eelamplay.com/ta