Tags : chiyaan 62

News Tamil News

விக்ரம் படத்தில் பிரபல மலையாள நடிகர்

தங்கலான் படத்தின் படப்பிடிப்பிற்குப் பிறகு நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். சித்தா படத்தினை இயக்கியவர் தான் இந்த அருண் குமார். விக்ரம் நடிக்கும் 62வது படமான இப்படத்தில் ஏற்கனவே எஸ் ஜே சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில், மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். விரைவில் அடுத்த அப்டேட் வெளியிடப்படும் எனவும் படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Read More