சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். இப்படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். 50 நாட்கள் கால்ஷீட்டை இப்படத்திற்காக ஒதுக்கியிருக்கிறார் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன், நானி, பஹத் பாசில் மற்றும் மஞ்சு வாரியர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More