Tags : ott release date

News Tamil News

அயோத்தி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இம்மாதம் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் அயோத்தி. சத்தமே இல்லாமல் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. காட்சிக்கு காட்சி பரபரப்பை ஏற்றியதோடு மட்டுமல்லாமல், நடித்த நடிகர்கள் அனைவரும் பெரும் பாராட்டுகளை குவித்தனர். இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ5 தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்கில் சென்று இப்படத்தை காண முடியாத ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்திருக்கின்றனர்.  Read More