Tags : padaiyappa

News Tamil News

முத்துவைத் தொடர்ந்து படையப்பா!?

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா நடித்த முத்து திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பல திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தினை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை, ரசிகர்களோடு சென்னை திரையரங்குகளில் கண்டுகளித்தனர் மீனாவும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரும். முத்து படத்தின் ரெஸ்பான்ஸைத் தொடர்ந்து படையப்பா படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  Read More