Tags : raasu kannu

News Tamil News

இன்று வெளியாகிறது மாமன்னனின் “ராசா கண்ணு” பாடல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மாமன்னன். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாமன்னன் படத்தின் முதல் பாடலான ராசா கண்ணு பாடல் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  Read More