ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாகும் ஜூன் மாதம்; அப்டேடுக்கு பஞ்சம் இல்லாத மாதம்;

 ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாகும் ஜூன் மாதம்; அப்டேடுக்கு பஞ்சம் இல்லாத மாதம்;

கோலிவுட் சினிமா என்று பார்த்தல், அதில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்கள் என்று பார்த்தல். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் தான். அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்த நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கு ஜூன் மாதத்தில் அவர்கள் நடிக்கும் படங்களின் அப்டேட் கொட்டிக் கிடக்கிறது.

ஜெயிலர், லியோ, மாவீரன், கேப்டன் மில்லர், கங்குவா, விடாமுயற்சி என அனைத்து பெரிய படங்களின் அப்டேட்டும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் ஜூன் மாதத்தில் வெளியாகும். அந்தப் பாடல் எஸ்.பி.பி-யின் குரலில் கம்பியூட்டர் கிராபிக் செய்யப்பட்ட பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இந்திய சினிமா உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ விஜயின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜுன் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்குகிறது.

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும்.

தனுஷ் நடிப்பில், அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகவுள்ளது.

எனவே, ஜூன் மாதம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் ஒரு மாதமாக இருப்பதால், கோலிவுட் வட்டாரத்திற்கே இம்மாதம் ஸ்பெஷல் தான்.

Related post