The Sixth Land திரைப்படம் விமர்சனம்

 The Sixth Land திரைப்படம் விமர்சனம்

ஆறாம் நிலம் : 2009ம் ஆண்டு இலங்கையில் போர் முடிவடைந்த போது பலர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர், பல பேர் கொல்ல பட்டனர். அப்படி சரணடைந்தவர்கள் 12 ஆண்டுகள் ஆகியும் அவர்கள் நிலைமை என்ன அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை பற்றி சொல்ல மறுக்கிறது இலங்கை அரசு.அப்படி சரணடைந்த ஒரு வீரரின் குடும்பம் இப்போதுள்ள சூழலில் அவர்கள் படும் அவஸ்தை மற்றும் தவிப்புகளை மனதை பிழியும் வகையில் நம் கண் முன் தருகிறார் இயக்குனர் அனந்த ரமணன்.
நாயகி நவாயுகா கணவனை மீட்க போராடும் இலங்கை தமிழ் பெண்ணாக வருகிறார். அவர் ஒவ்வொரு முறையும் கன்னி வெடி அகற்றும் பணிக்கு செல்லும்போது நம் மனதின் வேக துடிப்பு அதிகமாவதை உணர முடியும். தன் கணவனை எந்த ஒரு அமைப்பும் உதவ வில்லை என்ற விரக்தி இருந்தாலும் தொடர்ந்து போராடும் குணம் கொண்டவராக மிளிர்கிறார்.
அவரது மகளாக தமிழரசி என்ற சிறுமி பள்ளிக்கு செல்லும்போது மற்ற பிள்ளைகள் அவர்களது தந்தையுடன் செல்வதை அவர் ஏக்கத்துடன் பார்க்கும்பொழுதே அவரின் வலியை நம்முள் கடத்தி விடிகிறார், இறுதி காட்சியில் நம்மை பதற்றப்பட வைக்கிறார்.
போரில் சரணடைந்த குடும்பங்கள் படும் கஷ்டங்கள், இன்னும் போரில் வைக்கப்பட்ட கன்னி வெடிகளை இன்று வரை அகற்ற போராடும் அந்த மக்களின் வாழ்க்கை முறையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர். படம் சற்று மெதுவாக தான் நகரும் ஆனால் அதை பொறுமையுடன் பார்த்தால் அருமையான படைப்பை உணரலாம்.
IBC தமிழ் youtube சேனல் இந்த படத்தை நீங்கள் காணலாம்.

Related post