“V”-யை விடாத அஜித்; விடாமுயற்சி கதை இது தான்

 “V”-யை விடாத அஜித்; விடாமுயற்சி கதை இது தான்

வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், வலிமை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது அஜித்தின் 62-வது படத்திற்கும் “வி” எழுத்திலேயே தலைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. “விடாமுயற்சி” என்ற தலைப்பை அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இரவு 12 மணிக்கு லைகா நிறுவனம் வெளியிட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த இரு தினங்களாக AK 62 படத்தை பற்றி பலரும் பல கருத்துக்களையும், கதைக்களத்தையும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், மகிழ்திருமேனி இயக்கம் “விடாமுயற்சி” படத்தை பற்றி நாம் விசாரித்த போது.

மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் இப்படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும். தேடுதல் வேட்டையை நோக்கி இக்கதைகளம் நகரும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும், கடல் மற்றும் கப்பலை சார்ந்தே இப்படம் உருவாகவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“விடாமுயற்சி” பட டைட்டிலுக்கு பின் இருக்கும் “சூழல்” கடலை குறிக்கிறது என்றும். அந்த போஸ்டரை சுற்றி இருக்கும் “MAZE” – இலக்கை தேடும் கதாநாயகனுக்கு வரும் தடங்களையும், சவாலையும் குறிக்கிறது என்றும் வரும் செய்திகள் உண்மையே.

மேலும், தற்போது நேபாளத்தில் பைக் ரைடில் இருக்கும் அஜித். சுற்றுப்பயணத்தை முடித்த பின் ஓர் இடைவேளை எடுக்க போவதாகவும். “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு, ஜூன் மாதத்திற்கு மேல் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இப்போது வரும் அப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட AK 62 படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related post