V1 திரைப்படம் விமர்சனம்

 V1 திரைப்படம் விமர்சனம்

V1 திரைப்படம் – இது ஒரு திரில்லர் திரைப்படம்,படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறனிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய நமக்கு பரிட்சயமான மதராஸ் திரைப்படத்தில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த பவேல் நவகீதன்.படத்தின் கதை ஒரு நாள் இரவில் நடுரோட்டில் ஒரு இளம்பெண் கழுத்தில் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்,கொலை நடந்த இடத்தில மழை பெய்து விடவே அனைத்து தடயங்களும் அழிந்து விடுகின்றன.அந்த கொலையாளி யார் என கண்டறிய போராடும் இரு அதிகாரிகளும் கடைசி வரைக்கும் அந்த கொலையாளி யார் என தெரியாமல் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றன.இறுதியில் அந்த கொலையாளி யார் என்ன நோக்கம் என்பதை விறு விறு திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

படத்தின் நாயகர்கள் அந்த இரு அதிகாரிகள் தான் ஹீரோவாக நடித்துள்ள காஸ்ட்ரோ மற்றும் நாயகி விஷ்ணுபிரியா பிள்ளை கதாபாத்திரத்தில் பொருந்தி போகிறார்கள்,நல்ல நடிப்பு திறனும் வெளிப்படுகிறது. லிஜிஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மற்றபடி பெரிய நடிகர்கள் யாரும் இல்லை என்றாலும் படத்தின் திரைக்கதையில் கதாபாத்திரங்கள் பொருந்தி போகின்றன.படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை கதையை சுவாரசியமாக நகர்த்தி செல்ல உதவுகிறது.படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய விஷயத்தை கதையின் இறுதியில் அலசுகிறார்,தான் வெற்றிமாறன் உதவியாளர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

Related post