வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

 வடக்குப்பட்டி ராமசாமி விமர்சனம்

Seshu, Santhanam in Vadakkupatti Ramasamy Movie HD Images

இயக்கம்: கார்த்திக் யோகி

நடிகர்கள்: சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு, தமிழ், எம் எஸ் பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, கூல் சுரேஷ், நிழல்கள் ரவி

ஒளிப்பதிவு: தீபக்

இசை: ஷான் ரோல்டன்

படத்தொகுப்பு: சிவ நந்தீஸ்வரன்

கதைப்படி,

1970களில் நடக்கும்படியாக கதை நகர்கிறது. வடக்குப்பட்டி என்ற கிராமத்தில், கிராம மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பதற்காக தனது கோவில் ஒன்றை கட்டி, அங்கு வரும் கிராம மக்களிடம் பணம் பறித்து வாழ்க்கையை நடத்தி வருகிறார் சந்தானம்.

அந்த ஊருக்கு புதிதாக தாசில்தாரராக வருகிறார் தமிழ். கோவில் மூலமாக அதிக பணம் சம்பாதிக்க தன்னிடம் திட்டம் இருப்பதாக சந்தானத்திடம் தமிழ் கூற, அந்த திட்டத்தை தானே செயல்படுத்திக் கொள்வதாகவும் உனது உதவி எனக்கு தேவையில்லை என்று கூறிவிடுகிறார்.

இந்நிலையில், தனக்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அந்த கோவிலை கலெக்டரை வைத்து மூட திட்டம் தீட்டி கோவிலை மூடியும் விடுகிறார் தமிழ்.

ஊரில் பல அசம்பாவிதங்கள் நடக்கிறது. மீண்டும் அந்த கோவிலை திறக்க சந்தானம் முற்படுகிறார். அவரது முயற்சியானது பலனளித்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

Actress Megha Akash in Vadakkupatti Ramasamy Movie HD Images

நாயகன் சந்தானம் தன்னால் முடிந்த வரை படத்தில் ஸ்கோர் செய்ய நினைத்திருக்கிறார். அதை ஓரளவுக்கு நிவர்த்தியும் செய்திருக்கிறார். இவரைத் தாண்டி படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் வேற லெவலில் ஸ்கோர் செய்து தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

மாறன் மற்றும் சேசு இருவரும் இணைந்து படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டனர்.

எப்போதும் ஓவர் ஆக்டிங் செய்து காட்சிகளை வீணடிக்கும் ரவி மரியா மற்றும் ஜான் விஜய்யை இப்படத்தில் அளவோடு வேலை வாங்கியிருக்கிறார்.

இவர்களை தவிர்த்து நிழல்கள் ரவி , மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ் என நடித்த நடிகர்கள் அனைவரும் சிரிக்க வைத்து படத்தை ஜெயிக்க வைக்க பக்க பலமாக நின்றிருக்கிறார்கள்.

இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

சாமியை நம்பாத ராமசாமி எப்படி சாமியை நம்பினான் என்பதை ஒரு கிராமத்தை வைத்து அழகாக நகர்த்தி மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை படைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.

வடக்குப்பட்டி ராமசாமி – படம் முழுக்க காமெடி தான் சாமி…. –  3.5/5

Spread the love

Related post