சிக்லெட்ஸ் விமர்சனம்

 சிக்லெட்ஸ் விமர்சனம்

இயக்கம்: முத்து

நடிகர்கள்: சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமன், மனோபாலா, ஜேக் ராபின்சன், அம்ரிதா, மஞ்சிரா, ராஜ கோபால்

ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார்

இசை: பால முரளி பாலு

படத்தொகுப்பு: விஜய் வேலுகுட்டி

கதைப்படி,

நாயகிகளான நயன் கரிஷ்மா, அம்ரிதா மற்றும் மஞ்சிரா மூவரும் நண்பர்கள். சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை தொடுவதற்கு முன், தங்களுக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள்.

அதற்காக ஒரு பார்ட்டி ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறார்கள் மூவரும். தங்கள் வீட்டில் பொய் சொல்லிவிட்டு, மூவரும் தங்களது ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க
அவர்களை அழைத்துக் கொண்டு அந்த பார்ட்டிக்கு செல்ல திட்டமிடுகிறார்கள்.

இவர்கள் சென்ற பிறகு தான் மூவரின் பெற்றோர்களுக்கும் விஷயம் தெரிய, அவர்களைத் தேடி மூவரின் பெற்றோர்களும் செல்கின்றனர்.

இறுதியில் அவர்களை முன்னரே தடுத்தி நிறுத்திவிட்டார்களா இல்லையா.?? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ஆபாசம் என்றில்லாமல், கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு அழகாக கொடுத்து இயக்குனர் வென்றிருக்கிறார்.

முதல் பாதி ஏனோதானோவென்று சென்றாலும், இரண்டாம் பாதியில் இந்த கால 2கே கிட்ஸ்களுக்கு தேவையான அனைத்து நல்ல செய்திகளையும் கருத்துகளையும் கூறியிருக்கிறார் இயக்குனர்.

தவறான பாதையில் செல்லாமல், வாழ்க்கையில் முன்னேறினால் அந்த வாழ்க்கையானது எங்கு கொண்டு நிறுத்தும் என்பதையும் இந்த படம் தெளிவாக கூறியிருக்கிறது.

நேர்பாலீர்ப்புப் பெண் (லெஸ்பியன்) பற்றிய புரிதலையும் கதையில் கூறியிருக்கிறார் இயக்குனர்.

நடித்த இளம் பெண்கள் அழகாக நடித்து கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார்கள். ஒரு சில இடங்களில் சற்று சறுக்கல்கள் எட்டிப் பார்த்தாலும், பெரிதான குறையாக அதை கூறிவிட முடியாது.

வசனங்கள் படத்திற்கு பலமாக வந்து நிற்கிறது.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் ஒரு இசையை மட்டும் தீமாக கொடுத்து அதை ரசிக்க வைத்திருக்கிறார்.

கொளஞ்சி குமார் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் தனது மகளை அம்மா, அந்த இடத்தில் விட்டுச் செல்வது சற்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று தான்… இருந்தாலும்,

சிக்லெட்ஸ் – நல்ல மெசேஜ் தான் –  3/5

Related post