வட்டார வழக்கு விமர்சனம்

 வட்டார வழக்கு விமர்சனம்

இயக்கம்: கண்ணுச்சாமி ராமச்சந்திரன்

நடிகர்கள்: சந்தோஷ் நம்பிராஜன், ரவினா ரவி, விஜய் சத்யா

இசை: இளையராஜா

கதைப்படி,

1990களில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடக்கும் யதார்த்தமான பங்காளி சண்டையும் காதல் கதையும் தான் படத்தின் கதை.

கிராமத்திற்கேச் சென்று வாழ்ந்து வந்தது போன்ற ஒரு உணர்வை இப்படத்தின் வாயிலாக கொடுத்துவிட்டார் இயக்குனர்.

கிராம மக்கள் பேசும் வழக்கு மொழி, அவர்களின் நடை, உடை, உரையாடல் என அனைத்தும் பக்கா கிராமத்து படம் பார்த்த ஒரு ஃபீலை கொடுத்துவிட்டார்.

படத்தில் நடித்த நடிகர்கள் சிலர் அந்த கிராமத்தினர் என்பது படத்திற்கு கூடுதல் பலம். நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் அந்த கதாபாத்திரமாகவே மாறி, அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து சென்றிருக்கிறார்.

சென்சார் கட் செய்யப்பட்டதால் நிறைய உரையாடல்களை நம்மால் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. மாமன்னன், லவ் டுடே படத்திற்குப் பிறகு ஒரு வெற்றிப்படமாக அமையும் நாயகி ரவீனாவிற்கு.

இளையராஜாவின் 90’ஸ் பாடல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் சென்றது படத்திற்கு மிகப்பெரும் பலம். பாடல்களும் முனுமுக்க வைத்துவிட்டது.

கிடா சண்டை, ரேக்ளா உள்ளிட்டவை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. பருத்திவீரன் படம் போன்று ஒரு அக்மார்க் மதுரை சம்பவத்தை பார்க்க வேண்டும் என்றால் வட்டார வழக்கு படத்திற்கு தாராளமாக சென்று வரலாம்.

Rating :  3/5

Related post