கவலைக்கிடமான சரத்பாபு; ரசிகர்கள் பிரார்த்தனை!

 கவலைக்கிடமான சரத்பாபு; ரசிகர்கள் பிரார்த்தனை!

தமிழில் ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகர் சரத்பாபு. உச்ச நடிகர்களுக்கு இணையாக தனது நடிப்பையும் கொடுப்பவர்.

தெலுங்கிலும் அதிகப்படியான படங்களில் நடித்து பிரபலமானவர். சில வருடங்களாக நடிப்பை தவிர்த்து ஐதராபாத்தில் உள்ள தனதுஇல்லத்தில் ஓய்வில் இருந்து வந்தார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலையில் முன்னேற்றம் கண்டு மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

Related post