நிர்வாணமாக விஜய் படம் வில்லன் வெளியிட்ட புகைப்படம்
நடிகர் விஜய் நடித்து வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் துப்பாக்கி. இப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்றவர் நடிகர் வித்யுத் ஜமால்.
இவர் தொடர்ந்து அஞ்சான் படத்திலும் சூர்யாவிற்கு நண்பனாக நடித்திருந்தார். பாலிவுட் படங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார் வித்யுத்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் வித்யுத்.
மேலும், அவர் அதில் குறிப்பிட்டதாவது, 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கப்படி, ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வித்யுத் யார் உதவியும் இன்றி தனியாக வாழ்ந்து வருகிறார். துறவி போல அவர் ஆடையின்றி வாழ்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.