தளபதி 68ல் இரட்டை வேடத்தில் விஜய்!?

 தளபதி 68ல் இரட்டை வேடத்தில் விஜய்!?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது லியோ. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தினைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜய்யின் 68வது படமாக உருவாகும் இப்படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, புலி, மெர்சல் மற்றும் பிகில் என இதுவரை 6 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய்.

தளபதி 68 படத்திலும் இரட்டை வேடம் தான் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

Related post