சபாபதி விமர்சனம்

 சபாபதி விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சபாபதி”,படத்தின் கதை 

ஓய்வு பெற்ற பள்ளி வாத்தியாரான எம் எஸ் பாஸ்கரின் மனைவி உமா. இவர்களின் மகனாக வருகிறார் சந்தானம் (சபாபதி). சிறுவயதில் இருந்தே திக்குவாய் குறைபாடு உடையவர் சந்தானம்.

இவரின் எதிர்வீட்டில், நாயகியாக வசித்து வருபவத் ப்ரீத்தி வர்மா. இவரை சிறு வயதில் இருந்து  காதலித்து வருகிறார் சந்தானம்.

திக்குவாய் குறைபாடு இருப்பதால், பல இடங்களில் அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகிறார் சந்தானம்.. மேலும், இதனால் வேலையும் கிடைக்காமல் அல்லல்படுகிறார்.

அரசியல்வாதியாக வரும் சாயாஜி ஷிண்டேவின் கட்சிப் பணம் சுமார் 120 கோடியை, 6 பெட்டிகளில் அடைத்து காரில் எடுத்துச் செல்கின்றனர்.

சென்ற கார் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்து விடுகிறது.பணம் முழுவதும் தீயில் சிக்கி விடுகிறது.  அதில் ஒரு பெட்டி மட்டும் சந்தானம் கையில் சிக்கிவிடுகிறது..

அதன்பிறகு சந்தானம் வாழ்வில் விதி ஆடும் விளையாட்டே “சபாபதி” படத்தின் மீதிக் கதை..

நாயகனாக வரும் சந்தானம் படத்தில் தனி ஒருவனாக அதகளம் செய்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை எந்த இடத்திலும் சரிய விடாமல் தெறிக்க விட்டிருக்கிறார்.

திக்கி திக்கி பேசும் காட்சிகளில் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் சந்தானம்.
எப்போதும் டைமிங்க் காமெடிகளில் மன்னனாக வரும் சந்தானம், இப்படத்தில் தனது ட்ராக்கை மாற்றி, தனது உடல் வாகு நடிப்பில் காமெடியை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு பாராட்டுகள்.

எம் எஸ் பாஸ்கரோடு சந்தானம் அடிக்கும் காமெடி காட்சிக்கு திரையரங்கில் விண்ணை முட்டும் அளவிற்கு சிரிப்பலைகள் பறக்கிறது…

இருவருக்கும் இடைப்பட்ட காட்சிகள் படத்திற்கு பெரும் பலம். எம் எஸ் பாஸ்கரின் நடிப்பை நாம் பாராட்டி தான் சொல்ல வேண்டும் என்பதில்லை. மகா நடிகராக தமிழ் சினிமாவில் பெரும் தூணாக இருந்து வரும் எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு பெரும் வாழ்த்துகள்.

நாயகியாக வரும் ப்ரீத்தி வர்மா, பாடலுக்கும் ஆங்காங்கே ஒரு சில காட்சிக்கும் மட்டும் வந்து செல்கிறார். பெரிதாக ஸ்கோர் செய்யும்படியாக இடம் வைக்கப்படவில்லை..

நண்பனாக வரும் புகழுக்கு படத்தில் பெரிதாக இடம் கொடுக்கப்படவில்லை. மொத்தமாக வைக்கப்பட்ட காட்சிகள் மூன்று மட்டுமே..

வில்லனாக வரும், சாயாஜி ஷிண்டே வழக்கம் போல் காமெடி கலந்த வில்லதனாக ஆடி செல்கிறார்.

நல்ல ஒரு கதையை எடுத்து, அதை கனக்கச்சிதமாக இயக்கியிருக்கிற இயக்குனர் ஸ்ரீநிவாச ராவ்’க்கு பெரிய வாழ்த்துகள். எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் கதையை நகர்த்தி சென்றிருக்கிறார்.

பாஸ்கர் ஆறுமுகம் அவர்களின் ஒளிப்பதிவு கலர்புல்….

சாம் சி எஸ் அவர்களின் பாடல்கள் கேட்கும் ரகம்… பின்னனி இசை பெரிதாக இல்லை என்றாலும், குறை சொல்லும்படியாக இல்லை.

லியோ ஜான் பாலின் எடிட்டிங்க், படத்தை போரடிக்காமல் மிகவும் நேர்த்தியாக எடிட்டிங் செய்து ரசிக்க வைத்திருக்கிறார்.

Related post