நான் கண்ணால பார்த்த ஒரு லெஜண்ட் “விஜய்” – மிஷ்கின்

 நான் கண்ணால பார்த்த ஒரு லெஜண்ட் “விஜய்” – மிஷ்கின்

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் “லியோ”. கலவையான விமர்சனத்தை தாண்டி படம் வெற்றிகரமாக 500 கோடி வசூலை தாண்டியது.

படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இப்படத்தில் நடித்த இயக்குனர் மிஷ்கின் மேடையில் பேசும் போது, “ இந்தியாவிலேயே இப்படியொரு சூப்பர் பன்சுவாலிட்டி கொண்ட நடிகர் விஜய் மட்டும் தான். திரையில் மட்டும் இல்லை ரியலாகவும் விஜய் ஹீரோ தான். எல்லோரையும் ஈர்க்கும்படி விஜய்யிடம் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது எனத் தெரியவில்லை.

விஜய் நான் கண்ணால் பார்த்த ஒரு லெஜண்ட். அவர் வாழ்க்கையில் உச்சம் தொட்டுவிட்டார். அவருடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக நான் இதை சொல்லவில்லை. ” என்று கூறினார்.

Related post