ஆர் யூ ஓகே பேபி? – விமர்சனம்

 ஆர் யூ ஓகே பேபி? – விமர்சனம்

இயக்கம்: லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

இசை : இளையராஜா

ஒளிப்பதிவு: கிருஷ்ணசேகர்

நடிகர்கள்:

சமுத்திரக்கனி, அபிராமி,லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, அஷோக், அனுபமா குமார்.

கதைப்படி,

அஷோக்கும் முல்லையரசியும் பல வருடங்களாக லிவ்விங்க் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். முல்லையரசி கர்ப்பமாகிறார். எப்போதும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தும் அஷோக்கை வைத்து குழந்தையை எப்படி வளர்ப்பது என யோசிக்கிறார்.

மருத்துவமனையில் இருக்கும் செவிலியரின் பேச்சைக் கேட்டு, குழந்தையை பெற்றெடுத்ததும் வேறு யாருக்காவது விற்று விடலாம் என்று கூறுகிறார். சரி எனக் கூறும் முல்லையரசி, குழந்தையை பெற்றெடுத்து அரைகுறை மனதோடு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு அங்கிருந்து செல்கிறார்.

பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இல்லாமல் இருக்கும் சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிக்கு அந்த குழந்தை செல்கிறது.

குழந்தை தான் உலகம் என சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் சமுத்திரக்கனி – அபிராமி தம்பதியினர்.

இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு தனக்கு தன்னுடைய குழந்தை வேண்டும் என்று தனியார் சேனலுக்கு செல்கிறார் முல்லையரசி. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தான் நடத்தும் நிகழ்ச்சி மூலம் முல்லையரசிக்கு உதவி செய்ய நினைக்கிறார். அதே சமயத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிபி சிஐடி இதனை விசாரிக்கிறது.

இறுதியாக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..

கதையின் உயிர்நாடியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் முல்லையரசி. ஒரு தாய் தன் குழந்தைக்காக ஏங்கும் காட்சிகளில் பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.

பல வருடங்களாக குழந்தை இல்லாத ஏக்கமும், குழந்தை கிடைத்ததும் அதன் மீது கொடுக்கும் பாசமும் சமுத்திரக்கனியும் அபிராமியும் அந்த கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.

டிவி நிகழ்ச்சிகளில் வழக்கமாக நடத்தும் நிகழ்ச்சியை இப்படத்திலும் நடத்தி நீதி இழந்த பெண்களுக்கு ஆதரவாக நிற்கிறார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

க்ளைமாக்ஸ் காட்சிகளில் நடக்கும் கோர்ட் விவாதங்கள் மிகவும் விறுவிறுப்பாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.

இளையராஜாவின் இசையில் இவரது இசையையே இவரே காப்பி அடித்து இந்த படத்தில் புகுத்தியிருக்கிறார்.

ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில்,

ஆர் யூ ஒகே பேபி – தாயின் போராட்டம்…- 3/5

Related post