விஷால் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சமுத்திரக்கனி!

 விஷால் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சமுத்திரக்கனி!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகி வருகிறது “விஷால் 34”. படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழு படப்பிடிப்பும் தென் தமிழகத்திலே நடைபெறவிருக்கிறது.

இப்படத்தில், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் சமுத்திரக்கனியும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அவர்களுடன் விஷால் இருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post