அவள் பெயர் ரஜ்னி விமர்சனம்
இயக்கம்: Vinil Scariah Varghese
ஒளிப்பதிவு: ஆர் ஆர் விஷ்ணு
இசை: 4 Musics
நடிகர்கள்: காளிதாஸ் ஜெயராம், நமிதா ப்ரமோத், சைஜு க்ரூப், அஷ்வின் குமார், ரெபா ஜான்.
கதைப்படி,
படத்தின் ஆரம்பத்தில் சைஜு க்ரூப்பும் அவரது மனைவியான நமிதா ப்ரமோத்தும் காரில் சென்று கொண்டிருக்க, டீசல் இல்லாமல் கார் நின்று விடுகிறது.
காரில் நமிதா ப்ரமோத்தை வைத்து டீசல் வாங்க செல்கிறார் சைஜு. அப்போது, ஒரு உருவம் காரின் மேல் ஏறி, சைஜுவை குத்தி கொலை செய்கிறது.
நமிதா ப்ரமோத் அங்கிருந்து தப்பித்து விடுகிறார். நமிதா ப்ரமோத்தையும் கொலை செய்ய துடிக்கிறது அந்த உருவம்.
சைஜுவை கொலை செய்தது யார் என்று நமிதாவின் சகோதரனாக வரும் காளிதாஸ் களத்தில் இறங்குகிறார். இறுதியில், யார் அந்த மர்ம நபர்.? எதற்காக இந்த கொலை நடந்தது.?? அந்த மர்ம நபரிடம் இருந்து தனது அக்காவான நமிதாவை காளிதாஸ் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம், கதைக்கேற்ற நாயகனாகவே ஜொலித்திருக்கிறார். ஆங்காங்கே தென்பட்ட ஹீரோயிசத்தை குறைத்திருக்கலாம்.
கதையின் நாயகிகளாக தோன்றிய நமிதா ப்ரமோத் மற்றும் ரெபா ஜான் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
படத்தில் திருநங்கையாக நடித்த கதாபாத்திரம், இரண்டாம் பாதியை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
எதற்காக கொலை நடந்தது என்பதற்கான ப்ளாஷ் பேக் காட்சிகள் மிக அழுத்தமாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானதை கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.
வித்தியாசமான கோணத்தில் திரைக்கதையை நகர்த்திச் சென்றது மிகப்பெரும் ப்ளஸ்.
ரஜினி போஸ்டர்களை காட்டும் காட்சிகளில் மட்டும் மாஸ் மியூசிக் கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
அவள் பெயர் ரஜ்னி – நிச்சயம் ஒருமுறை திரையரங்கில் பார்க்கலாம்… – 3.25/5