2 ஆஸ்கர் வென்ற பயில்வான் – சி.எஸ்.கே வின் கேப்டன் கேதார் ஜாதவ்; வி.பி – ஜி.வி.பி ட்வீட்;

 2 ஆஸ்கர் வென்ற பயில்வான் – சி.எஸ்.கே வின் கேப்டன் கேதார் ஜாதவ்; வி.பி – ஜி.வி.பி ட்வீட்;

சென்னை – 28, மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றிப்படங்களை இயக்கி தற்போது நாக சைதன்யா நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள “கஸ்டடி” படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

மே12ஆம் தேதி வெளியாகவுள்ள “கஸ்டடி” படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரு தினங்களுக்கு முன் சம்பந்தமே இல்லாமல் “பயில்வான் ரங்கநாதன் 2 ஆஸ்கர் வென்றுள்ளார் என்றும், மேலும் அதை பற்றி தெரிந்துகொள்ள ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் பக்கத்தை பாருங்கள்” என்றும் பதிவு செய்திருந்தார் இயக்குனர் வி.பி.

அதனை, தொடர்ந்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் கேதார் ஜாதவ் தான் என்று கேளிக்கையாக வீடியோ பதிவு செய்து. இதனை பற்றி தெரிந்து கொள்ள ஜெயம் ரவியின் ட்விட்டர் பக்கத்தை பார்க்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார் ஜி.வி.பி.

இந்த இரண்டு ட்வீட்களையும் கண்ட ட்விட்டர் குருவிகள், வெங்கட் பிரபு மற்றும் ஜி.வி.பிரகாஷின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா? என்று குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.

ட்வீடுக்கு காரணம் இது தான்;

இந்த இரண்டு ட்வீட்களை பற்றி நாம் விசாரித்ததில், “திட்டம் இரண்டு – (Plan B)” படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணையும் அடுத்த படத்தின் அறிவிப்பை தான் படக்குழு வேறு விதத்தில் செய்து வருகிறது என்றும். அந்த படத்திற்காக வரவேற்பு அதிகரிக்கவே இப்படி திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்கின் ட்வீட்களும், இதை உறுதி செய்யும் விதத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post