பில்டப் – விமர்சனம் 3/5

 பில்டப் – விமர்சனம் 3/5

இயக்கம் : கல்யாண்

நடிகர்கள்: சந்தானம், ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான்

ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்தினராஜ்

இசை: ஜிப்ரான்

கதைப்படி,

கதை 1980-90களில் நடக்கிறது. ஜமீன் பரம்பரையானது சுந்தர் ராஜனின் குடும்பம். இவரது மகனாக வருகிறார் ஆடுகளம் நரேன். இவருக்கு மகனாக வருகிறார் சந்தானம். சுந்தர் ராஜன் ரஜினிகாந்தின் தீவிர விசிறி. பேரன் சந்தானம் கமல்ஹாசனின் தீவிர விசிறி.

தாத்தாவிற்கும் பேரனுக்கும் அவ்வபோது செல்ல சண்டைகள் வரும். இந்நிலையில், சுந்தர் ராஜனின் வீட்டில் அரசர் காலத்து கத்தி ஒன்றில் புதையலுக்கான ரகசியம் இருப்பதை அறிந்த மன்சூர் அலிகான் டீம், அதை கைப்பற்ற வருகிறது.

அதற்குபதிலாக, வைரக்கற்கள் தருவதாக சுந்தர் ராஜனிடம் தருவதாக கூற, அது கற்கண்டு என்று அதை விழுங்கி விட, சுந்தர் ராஜன் இறந்து விடுகிறார்.

இந்த சூழலில், துக்கம் கேட்க குடும்பத்துடன் வருகிறார் நாயகி ராதிகா ப்ரீத்தி. இவரை பார்த்ததும் காதலில் விழுகிறார் சந்தானம்.

கீரியும் பூனையுமாக எப்போதும் இருக்கும் சந்தானமும் அவரது தங்கையும் ஒரு சவால் விடுகின்றனர். தாத்தாவின் உடலை எடுப்பதற்குள் ராதிகாவை ஐ லவ் யூ சொல்ல வைக்கிறேன் என்று தனது தங்கையிடம் சவால் விடுகிறார் சந்தானம்.

விடுத்த சவாலில் ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் சந்தானம், கதைக்கு என்ன தேவையோ அதை அளவோடு தெகட்டாத அளவிற்கு கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன கவுண்டர்களில் நம்மை சிரிக்க வைத்து விடுகிறார்.

நாயகி ராதிகா ப்ரீத்தி, பார்ப்பதற்கு அழகாகவும், காட்சிகளில் க்யூட்டாகவும் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தானத்திற்கு ஈடு கொடுத்து காட்சிகளை பகிர்ந்திருக்கிறார் ராதிகா.

படத்தின் மிகப்பெரும் பலம் என்று படத்தில் நடித்த ஒரு சிலரை கூறலாம். அதில் முக்கியமானவர்கள் ஆனந்த ராஜ் மற்றும் ஆடுகளம் நரேன்.

இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகள் திரையரங்குகளில் சிரிப்பலை விண்ணை முட்டும் அளவிற்கு எகிற வைக்கிறது. குடிகாரனாக ஆடுகளம் நரேனும் பெண் வேடமிட்டு ஆனந்தராஜும் தங்களது காமெடி சரவெடியை சிதற விட்டிருக்கிறார்கள்.

மயில்சாமி, சாமிநாதன், மனோபால், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை இவர்களும் தங்களது பணிகளை சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்கள்.

கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்க்ஸ்லீ இவர்கள் வரும் காட்சியில் காமெடி பெரிதாக வொர்க்-அவுட் ஆகாததால், கதையில் சற்று நெருடல் ஆகி விடுகிறது.

க்ளைமாக்ஸ் அசத்தல்…
எப்போதும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது படங்களை இயக்கி வரும் கல்யாண், இப்படத்திலும் அதையே கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் காமெடி ட்ரை ஆனது திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.

ஜிப்ரானின் பாடல்கள் ஓகே ரகமாக கடந்தாலும், பின்னணி இசை பெரிதாக கைகொடுக்கவில்லை. ஜேக்கப் ரத்தினராஜின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக கொடுத்திருக்கிறது.

80களின் காலகட்டத்தை காட்டி நம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்துச் சென்று விட்டார் ஒளிப்பதிவாளர் ஜேக்கப்.

மொத்தத்தில்

80ஸ் பில்டப் – கலகலப்பு…

Related post