சார்ல்ஸ் எண்டர்ப்ரைசஸ் விமர்சனம்

 சார்ல்ஸ் எண்டர்ப்ரைசஸ் விமர்சனம்

Charles Enterprises

ஊர்வசி, கலையரசன், பாலு வர்கீஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில், சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் தான் “சார்ல்ஸ் எண்டர்ப்ரைசஸ்”.

கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான சார்லஸ் என்டர்ப்ரைஸ்ஸ் திரைப்படம். மலையாளத்தில் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அதில் நடித்த பாதிக்கும் மேற்பட்ட நடிகர்கள் தமிழ் நடிகர்கள் என்பதாலும் அந்த படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தாலும், தற்போது தமிழில் வெளியிட்டிருக்கிறது படக்குழு.

மேலும், மலையாளத்தில் ஹிட் அடித்து தமிழில் வெளியான படங்களான மாளிகாபுரம், 2018 வரிசையில் தற்போது “சார்லஸ் என்டர்டைன்மெண்ட்” படமும் இணைந்துள்ளது.

எதை பேசுகிறது இப்படம்?

மாலை கண் நோயால் அவதி படும் ஒருவர், விநாயகர் சிலையை விற்று அந்த கடவுள் மூலம் ஒரு தொழில் தொடங்க நினைக்கிறார். அதற்கு அந்த கடவுள் என்ன செய்தார் என்பதை சுவாரஸ்யமாக பேச முயற்சித்திருக்கிறது இப்படம்.

கதைப்படி,

மாலை கண் நோயால் அவதிப்படும் பாலு வர்கீஸ், குரு
சோமசுந்தம் மற்றும் ஊர்வசி ஜோடிக்கு மகனாவார்.

தனது அப்பாவை பிரிந்து அம்மா ஊர்வசியுடன் வாழ்ந்து வருகிறார் பாலு வர்கீஸ். கேக் ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அவருக்கு இருக்கும் குறையால் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அவதிப்படுகிறார். எனவே சொந்தமாக ஒரு கடையை ஆரம்பிக்க திட்டமிடும் அவருக்கு போதிய பணமில்லை.

அப்போது திடீரென ஒரு கும்பல், ஊர்வசி வழிபட்டு வரும் விநாயகர் விக்ரகத்தை தங்களிடம் கொடுத்தால் பல லட்ச ரூபாய் பணத்தை தருவோம் என்று பாலுவிடம் பேரம் பேச. ஆரம்பத்தில் யோசித்த பாலு பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார்.

இறுதியில் அந்த விக்ரகத்தை விற்றாரா பாலு? தீவிர விநாயகர் பக்தரான ஊர்வசி என்ன செய்தார்? என்பது படத்தின் படத்தின் மீதிக்கதை…

படத்தில் நம்மை ரசிக்க வைத்த காட்சி என்று பார்த்தால், “ஊர்வசியை காரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சி தான்”. அதையும் தாண்டி பல இடங்களில் காமெடிக்கான கேப் இருந்தாலும், அதை முழுமையாக்க தவறியிருக்கிறார் இயக்குனர் சுபாஷ் லலிதா.

சிறிய கதை தான் என்றால், அதற்கேற்ப ஒரு திரைக்கதை அமைக்க தவறிவிட்டு பல காட்சிகளை காட்டாயமாக வைத்திருக்கிறார் யஜுனர்.

ஏற்கனவே, சிலை கடத்தல், சிற்பங்கள் கடத்தல் என பல விஷயங்கள் உலா வர. அதற்கேற்ப ஒரு கதையமைத்திருக்கலாம். ஆனால், அதை விட்டுவிட்டு சுய லாபத்திற்காக ஒரு சிலையை விற்கலாம் என்ற முடிவு சற்று தவறான ஒரு கருத்தை பதிவு செய்தது போல் இருக்கிறது.

படத்தின் ஒரு பாடல் கேட்கும் ரகம். ஒளிப்பதிவு கலர்ஃபுல்.

கொடுத்த பாத்திரத்திற்கு அனைத்து நடிகர்களும் சிறப்பு சேர்த்துள்ளனர்.

சார்ல்ஸ் எண்டர்ப்ரைசஸ் – சாரி ஆடியன்ஸ்  – (2.5/5)

Related post