Dr 56 திரைவிமர்சனம்

 Dr 56 திரைவிமர்சனம்

ப்ரியாமணி நடிப்பில், ராஜேஷ் ஆனந்த்லீலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “Dr 56”.

கதைப்படி,

அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெண் மருத்துவர் ஒருவரை கொலை செய்து சாலையில் வீசி செல்ல. அவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ ஆபீஸராக வருகிறார் ப்ரியாமணி.

யார் அந்த கொலை செய்திருக்கிறார் என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு அடுத்தநாள் மற்றொரு ஆண் மருத்துவரும் கொலை செய்யப்பட்டு வீசப்படுகிறார்.

இது பெரும் தலைவலியாக வர, தொடர்ந்து தனது விசாரணையை தீவிரப்படுத்துகிறார் ப்ரியாமணி.

இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, ஒரு பக்கம் முழுவதுமாக எரிந்த நிலையில் வருகிறார் கதையின் நாயகன் PR. ஒருவகையான நோயால் பாதிக்கப்பட்ட இவர், 56 நிமிடத்திற்கு ஒரு மாத்திரை எடுத்தால் மட்டுமே இவரால் உயிர் வாழ முடியும் என்ற சூழல்.

இச்சூழலில், தொடர்ந்து நடைபெறும் கொலைகளை PR தான் செய்கிறார் என்று கண்டறிகிறார் ப்ரியாமணி. இவர் கைது செய்யப்படும் அதேவேளையில், மற்றொரு மருத்துவரும் கொலை செய்யப்படுகிறார்.

இறுதியாக யார் இந்த PR.? மருத்துவர்களை கொலை செய்து வரும் அந்த மர்ம நபர் யார்.?? எதற்காக இந்த கொலைகள் நடைபெறுகிறது..??? என்பது மீதிக் கதை.

பொதுவாக, போலீஸ் பாத்திரமோ, அல்லது ஸ்பெஷல் ஆபிசர் பாத்திரமோ ஒரு கர்வமும் ஏத்தமும் இருக்கும். ஆனால், அது ஏதும் இல்லாமல் மிக எளிமையாகவும் யதார்த்தமாகவும் நடித்திருக்கிறார் ப்ரியாமணி.

மனிதர்களின் மேல் செய்யப்படும் மருந்து ஆராயச்சி என்ற முக்கியமான விஷயத்தை கையில் எடுத்து அதை படமாக்கியிருக்கிறார் இயக்குனர். அதற்காக இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள்.

ஒரு நோயைக் குணப்படுத்தும் மருந்து நடைமுறைக்கு வரும் முன், அந்த மருந்துகள் மனிதன் மீது பயிற்சி சோதனை நடத்தப்படும், அவ்வாறு நடத்தப்படும் சோதனை சாதனையாக முடிந்தால் நலம் அதுவே சோதனையாக முடிந்து பலருக்கும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்த சம்பவத்தைத் தான் மையமாகக் கொண்டு இந்த கதையை எடுத்திருக்கிறார் இயக்குனர்.

கதை பலமாக இருக்கும் அளவிற்கு, திரைக்கதை வலுவாக இல்லை. கலை இயக்குனர்களும் கூடுதல் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் படம் கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும்.

நாயகன் PR ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். ஒளிப்பதிவிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

நோபின் பாலின் இசையில், பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை வசனங்களை விட கூடுதல் சத்தம் இருந்ததால் வசனங்கள் கேட்கவில்லை. தலை வலி தான் மிச்சம்

Dr 56 – தூக்க மருந்து.

Related post