டாங்கி விமர்சனம்

 டாங்கி விமர்சனம்

இயக்கம்: ராஜ்குமார் ஹிரானி

நடிகர்கள்: ஷாருக்கான், டாப்சி

ஒளிப்பதிவு: சி கே முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய்

இசை: பாடல்கள் – பிரிதாம், பின்னணி இசை – அமன் பண்ட்

கதைப்படி,

ராணுவத்தில் பணிபுரிந்த போது தனது உயிரைக் காப்பாற்றிய நண்பன் ஒருவருக்கு நன்றி கூற கிராமத்திற்கு வருகிறார் ஷாருக்கான். அங்கு தான் தெரிகிறது நண்பன், விபத்தில் இறந்துவிட்டார் என்று.

இதனால், கடனில் சிக்கி தவிக்கும் நண்பனின் தங்கையான டாப்சி மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்திக்கிறார் ஷாருக்கான்.

கடனை அடைப்பதற்காக லண்டன் செல்லவிருப்பதாக டாப்சி கூறுகிறார். அதற்கான தேர்வில் தோல்வியடைகிறார் டாப்சி.

லண்டன் செல்ல தான் உதவி செய்வதாக, அந்த கிராமத்திலேயே தங்கியிருந்து டாப்சிக்கும் அவரது நண்பர்களுக்கு உதவி செய்கிறார் ஷாருக்கான். திருட்டுத்தனமாக லண்டனுக்கு அனைவரையும் அழைத்துச் செல்கிறார் ஷாருக்கான்.

அதன்பிறகு அங்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

1990 மற்றும் 2020 என இரண்டு காலகட்டங்களில் கதை நகரும்படியாக கதை எழுதப்பட்டுள்ளது.
இரண்டு காலகட்டத்திலும் தனக்கான போர்ஷனை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் செய்து முடித்து விட்டார் ஷாருக்கான். படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களில் ஈரத்தைக் கொண்டு வரவைக்கும்படியான ஒரு நடிப்பை ஆங்காங்கே கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கிறார் ஷாருக்கான்.

மன்னு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகை டாப்சி. வலுவான கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிர்கொடுத்திருக்கிறார் டாப்சி. உடன் நடித்த நண்பர்கள் அனைவரும் போதுமான அளவிற்கான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

அமன் பண்ட் அவர்களின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். மூன்று ஒளிப்பதிவாளர்களின் வெளிச்சம் படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

உணர்வு ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்து தான். –  3.25/5

Related post