தக் லைஃப் படத்தில் சிம்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

 தக் லைஃப் படத்தில் சிம்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தக் லைஃப்”.

படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே நமது தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக பதிவு செய்திருந்தோம்.

அதை தற்போது உறுதிபடுத்தும் வண்ணமாக படக்குழு, சிம்பு தக் லைஃப் படத்தில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

படத்தில் அவர் தோன்றும் கெட்-அப் உடன் அடங்கிய போஸ்டரை வெளியிட்டு இதை அறிவித்துள்ளனர்.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Related post