பைட் க்ளப் விமர்சனம்

 பைட் க்ளப் விமர்சனம்

இயக்கம்: அப்பாஸ் ஏ ரஹ்மத்

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: லியோன் பிரிட்டோ

நடிகர்கள்: விஜய் குமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ்

கதைப்படி,

வட சென்னையை மையப்படுத்தி கதை நகர்கிறது. சிறுவயதில் இருந்தே கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் விஜய் குமார். தான் இருக்கும் பகுதியில் உள்ள இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களை விளையாட்டிலும் படிப்பிலும் ஊக்கப்படுத்தி வருகிறார் கார்த்திகேயன் சந்தானம்.

விஜய்குமார் சிறுவயதில் இருக்கும் போதே, அந்த ஏரியாவில் போதை பொருளை விற்று வரும் சங்கர் தாஸும், இவருடன் கூட்டணி சேர்ந்து கஞ்சா பொருளை விற்று வரும் கார்த்திகேயனின் சகோதரரும் இணைந்து கார்த்திகேயனை கொன்று விடுகின்றனர்.

இந்த பாதிப்பு விஜய்குமாரின் மனதிற்குள் இருக்கிறது. சங்கர் தாஸ், கார்த்திகேயனின் சகோதரனை மாட்டிவிட, அவர் ஜெயிலுக்குள் செல்கிறார்.

வருடங்கள் உருண்டோட, கல்லூரி படித்து வருகிறார் விஜய் குமார். தனது அண்ணனை கொலை செய்ததற்காக தண்டனைப் பெற்று வெளியே வருகிறார் கார்த்திகேயனின் தம்பி.

தன்னை ஜெயிலுக்குள் அனுப்பிய சங்கர் தாஸை பழி வாங்க நினைக்கிறார் கார்த்திகேயனின் தம்பி. சங்கர் தாஸ் லோக்கல் அரசியலில் புள்ளியாக இருக்கிறார்.

சங்கர் தாஸை பழி வாங்க விஜய் குமாரை பகடைக்காயாக பயன்படுத்த ஆரம்பிக்கிறார் கார்த்திகேயனின் தம்பி.

இந்த ஆட்டத்தை விஜய்குமார் கண்டு, அதில் இருந்து மீண்டு வந்தாரா.? இதனால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு என்னென்ன.?? என்பதே படத்தின்மீதிக் கதை.

உறியடி படத்தில் நடித்த அதே தோற்றத்தைக் கொண்டு, செல்வம் என்ற கதாபாத்திரமாகவே மாறி இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார். பேசும் மொழி, உடல் மொழி என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆக்‌ஷனில் களம் இறங்கி ஆடியிருக்கிறார். யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

லோக்கல் அரசியல்வாதியாக நடித்து அசத்தியிருக்கிறார் சங்கர் தாஸ். அரசியல்வாதி, நிதானம், ஆக்ரோஷம் என அனைத்திலும் களமிறங்கி அடித்திருக்கிறார் சங்கர். தொடர்ந்து நடித்த நடிகர்கள் அனைவரும் கொடுத்த வேலையை தெளிவாக செய்து முடித்திருக்கிறார்கள்.

அனைவரிடத்திலும் நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அப்பாஸ். திரைக்கதை படத்திற்கு மிகப்பெரும் பலம்.

படம் முழுக்க முழுக்க கஞ்சா புகை சூழ்ந்துள்ளதால், அது மட்டுமே சற்று இல்ல அதிகமாகவே நெருடலாக உள்ளது.

படத்தின் மிகப்பெரும் பலமே ஒளிப்பதிவும் பின்னணி இசையும் தான். கோவிந்த் வசந்தாவின் இசையில் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. இளையராஜாவின் ஒரு சில பாடல் வந்து செல்வது இன்னும் கூடுதல் உற்சாகத்தைகொடுக்கிறது.

ஒவ்வொரு காட்சிளையும் ஒளிப்பதிவாளர் நன்றாகவே கொடுத்திருக்கிறார். அதற்கான மெனக்கெடலும் காண முடிந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ரியலாகவே இருந்தது ப்ளஸ்..

மிரட்டலான மேக்கிங்கை காண ஒருமுறை நிச்சயம் விசிட் அடிக்கலாம்.

பைட் க்ளப் – வேகம்.. –  3.25/5

Related post