தனுஷ் கொடுத்த அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

 தனுஷ் கொடுத்த அப்டேட்; உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் , பிரியங்கா மோகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் பொங்கல் தின விடுமுறையை முன்னிட்டு படத்தினை திரைக்குக் கொண்டு வர உள்ளது படக்குழு.

ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் அனைத்து ரசிகர்களிடையும் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

விரைவில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர்… பொங்கல் ரிலீஸ் என ட்வீட் போட்டுள்ள தனுஷ், செம்ம ஸ்டைலிஷான போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Related post