ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் “வீரன்”; பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு!

 ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் “வீரன்”; பொள்ளாச்சியில் துவங்கிய படப்பிடிப்பு!

‘சிவகுமாரின் சபதம்’ ‘அன்பறிவு’ என்ற இரு படங்களின் சின்ன சரிவுக்குப் பின் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் புதிய படம் ‘வீரன்’.

இயக்குனர் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பொள்ளாச்சியில் பூஜையுடன் தொடங்கியது.

‘ஹிப் ஹாப்’ ஆதியே இப்படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Related post