கனடாவிலும் எதிரொலித்த “காளி” பட போஸ்டர் சர்ச்சை!

 கனடாவிலும் எதிரொலித்த “காளி” பட போஸ்டர் சர்ச்சை!

லீனா மணிமேகலை இயக்கத்தில் “காளி” என்ற ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியானது.

போஸ்டர் வெளியானது முதல் லீனா மணிமேகலை மீது இந்து அமைப்புகள் பல இடங்களில் இவர் மீது போலீஸில் புகார் அளித்தது.

இப்போஸ்டரில் காளி உருவம் கொண்ட பெண், புகைப்பிடிப்பது போன்று போஸ்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கனடா நாட்டின் டெரோண்டோவில் உள்ள `ஆகா கான்’ அருங்காட்சியகத்தில் இந்த போஸ்டர் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, காளி படத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கனடாவுக்கான இந்திய தூதரகம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Related post