கெழப்பய விமர்சனம்

 கெழப்பய விமர்சனம்

கெழப்பய படத்தின் ஒரு தயாரிப்பாளரான கதிரேச குமார் முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் இந்த கெழப்பய. இப்படத்தினை யாழ் குணசேகரன் இயக்கியிருக்கிறார்.

கதைக்குள்…

60 முதல் 70 வயது மதிக்கத்தக்க கதிரேச குமார், தனதுபணியை முடித்துக் கொண்டு கிராமத்து ரோட்டில் தனது மிதிவண்டியில் வீடு சென்று கொண்டிருக்கிறார். அப்போது, அந்த வழியாக கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக் கொண்டு ஒரு கார் வருகிறது. உடன் 4 பேர் வருகின்றனர்.

அந்த கார் செல்ல வழி கொடுக்காமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் கதிரேச குமார். இதனால் கடுப்பான காரில் இருந்தவர்கள் கதிரேச குமாரை தாக்கி விடுகிறார்கள்.

இதனால் டென்ஷனான கதிரேச குமார் கார் சாவியை எடுத்து தூக்கி எறிந்து விடுகிறார். மீண்டும் கதிரேசனை தாக்கத் தொடங்குகிறது அந்த கும்பல்.

எதற்காக அந்த கார் செல்ல வழி கொடுக்க மறுக்கிறார் கதிரேச குமார்.? இது தான் படத்தின் மீதிக் கதை.

இந்த வயதிலும் அவ்வளவு எனர்ஜியோடு படத்தின் கருவை தானே தூக்கி சுமர்ந்திருக்கிறார் கதிரேச குமார். படத்தின் முதல் பாதி முழுவதையும் ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் முக பாவணையிலும், கண் அசைவிலும் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்.

காரில் வந்த நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை மிக தெளிவாக செய்து முடித்திருக்கிறார்கள். ஒரு சிறிய அழகான கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை சரியாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்திருக்கிறார். இரண்டாம் பாதியில் சற்று தடுமாறியிருந்தாலும் தடம் மாறவில்லை என்பது போல், எடுத்துக் கொண்ட கதையை அழகாக கூறி முடித்திருக்கிறார்.

இசை பக்கபலமாக இருந்தது., ஒளிப்பதிவு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

கெழப்பய – ரொம்ப ஸ்ட்ராங்க்.. – 3/5

Related post