லில்லி ராணி விமர்சனம்

 லில்லி ராணி விமர்சனம்

சாயா சிங், தம்பி ராமையா மற்றும் துஷ்யந்த் நடிப்பில், விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “லில்லி ராணி”.

சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் சாயா சிங் இப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகை தந்துள்ளார்.

கதைப்படி..,

போலீஸாக வரும் தம்பி ராமையா விலைமாதுவான சாயாசிங் உடன் ஒருநாள் இருக்க. சில மாதங்களுக்குப் பின் சாயாசிங் ஒரு குழந்தையை பெற்றடுகிறார். சில நாட்களில் அந்த குழந்தைக்கு மிகப்பெரும் மருத்துவ பிரச்சனை ஒன்று வர, விரைவில் ஆப்ரேஷன் செய்தால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகிறது.

பல லட்சம் வரையில் செலவு ஏற்படும் என்பதால், வேறு வழியின்றி உதவி தேடி தம்பி ராமையாவிடம் செல்கிறார் சாயா.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறும் தம்பி ராமையா, அமைச்சர் மகனாக வரும் துஷ்யந்தை வைத்து பணம் பறிக்க திட்டம் தீட்டுகின்றனர் சாயா சிங்கும் தம்பி ராமையாவும்.

பணம் பறித்தார்களா? இல்லையா? குழந்தையை எப்படி காப்பாற்றினார்கள் என்பது மீதிக்கதை…

கதையின் மூலக்கரு மிகவும் வலிமையாக இருந்தாலும், திரைக்கதையில் பெரிதாய் கவனம் செலுத்ததால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைந்து போகிறது.

ஆனாலும், 1 மணி நேரம் 33 நிமிட படம் என்பது படத்தின் முக்கிய பலம்.

பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும், இதுதான் தன்னுடைய முதல் படம் என்பது போல் அமெட்சூர் நடிப்பையே நடித்திருக்கிறார் சாயா சிங்.

படத்தின் காமெடி காட்சிகள் கதையின் போக்கை தொய்வடைய செய்கிறது. கதைக்கு ஒட்டாத வசனங்கள் படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது.

வழக்கம் போல் இல்லாமல் கொடுத்த காசுக்கு மேல் நடித்து படத்தை சுதப்பியுள்ளார் தம்பி ராமையா.
லில்லி ராணி – விலை கொடுத்த ம(மா)தர்.

Related post