மால் – விமர்சனம்

 மால் – விமர்சனம்

இயக்கம்: தினேஷ் குமரன்

ஒளிப்பதிவு & எடிட்டிங்: ஷிவராஜ்

நடிகர்கள்: கெஜராஜ், அஸ்ராப், தினேஷ் குமரன், சாய் கார்த்தி, கெளரி நந்தா

கதைப்படி,

வழக்கமான சிலைகடத்தல் கதை தான் இப்படமும். ஆனால்…,

மிகவும் தொன்மைவாய்ந்த சோழர் சிலை ஒன்றினை திருட்டு கும்பல் ஒன்று திருடுகிறது. அந்த கும்பல், சிலையை கைமாற்றி விட வேறு ஒரு டீமை நாடுகிறது.
அந்த டீம் அதற்கான வேலைகளில் இறங்குகிறது.

அதில் இருப்பவர்தான் சாய் கார்த்தி. சாய் கார்த்தி அசந்த நேரத்தில் மற்றொரு திருட்டு கும்பல் அந்த சிலைக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்குகிறது. இதற்கு நடுவில் போலீஸ் அதிகாரி கெஜராஜ், அந்த சிலையை தனக்கு சொந்தமாக்க நினைக்கிறார்.

சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வரும் தினேஷ் குமரன் இந்த கும்பலிடம் எப்படி சிக்கினான்.? கடைசியாக அந்த சோழர் சிலை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு என்ன கொடுக்கப்பட்டதோ அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள். ஒரு இரவுக்குள் நடக்கும் கதையை அவ்வளவு விறுவிறுப்பாகவும் வேகமாகவும் கடத்திச் சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து விட்டார் இயக்குனர்.

சாய் கார்த்தி அக்கதாபாத்திரமாகவே மாறி புகுந்து விளையாடியிருக்கிறார். திரைக்கதையில் எந்த இடத்திலும் கூட தொய்வு ஏற்படாத வண்ணம் மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் என்றே கூறலாம்.

மால் – தூள் – 3.5/5

Related post