ஒரு வழியாக “துருவ நட்சத்திரம்” ரிலீஸுக்கு நாள் குறித்த படக்குழு!

 ஒரு வழியாக “துருவ நட்சத்திரம்” ரிலீஸுக்கு நாள் குறித்த படக்குழு!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படம் தான் “துருவ நட்சத்திரம்”.

இப்படத்தின் தயாரிப்பாளரான கெளதம் வாசுதேவ் மேனன், படத்தின் மீது இருந்த பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், இன்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. வரும் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி படத்தினை திரைக்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related post