கன்னடம் மற்றும் மலையாள படங்கள் தான் உதாரணம் – மான் வேட்டை விழா ஹைலைட்ஸ்;

 கன்னடம் மற்றும் மலையாள படங்கள் தான் உதாரணம் – மான் வேட்டை விழா ஹைலைட்ஸ்;

புதுமுகங்கள் நடிப்பில், ஶ்ரீகாந்த் தேவா இசையில் அகம் புறம், தீநகர், காசேதான் கடவுளடா படங்கள் புகழ் இயக்குநர் திருமலை இயக்கத்தில் உருவாகியுள்ள “கமர்ஷியல் திரில்லர்” திரைப்படம் தான் “மான் வேட்டை”.

T Creations சார்பில் இயக்குநர் M.திருமலை இப்படத்தினை தயாரித்துள்ளார். விரைவில் திரைக்கு இப்படம் வரவுள்ளது. இந்நிலையில், திரை பிரபலங்களோடு, படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அவ்விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பேசிய முக்கிய அம்சங்களாவது,

தயாரிப்பாளர் K.ராஜன் :

இயக்குநர் திருமலை அனைவருக்கும் உதவ கூடிய நல்ல உள்ளம் கொண்டவர். இப்படத்தை, சிறப்பான முறையில் எடுத்து முடித்து இருக்கிறார்கள். மான்வேட்டை படத்தை கடின உழைப்பையும், அர்பணிப்பையும் அளித்து உருவாக்கி இருக்கின்றனர். இந்த படம் வசூல்வேட்டை காண வேண்டும்.

தயாரிப்பாளர் JSK சதீஷ்குமார் :

ஒரு படத்தின் ஆடியோ வெற்றி பெற்றாலே அதை வைத்து படத்திற்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டலாம். இதை இந்த படம் சிறப்பாக செய்துள்ளது. நல்ல படங்கள் எப்பொழுதும் வெற்றி பெறும். அதற்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கன்னட மொழி படங்கள் மிகப்பெரிய உதாரணம்.

தயாரிப்பாளர் PL தேனப்பன் :

படங்களில் சின்ன படம் பெரிய படம் என்று ஒன்னும் இல்லை. படம் வெளியான பிறகு தான் அது முடிவாகும். படத்தின் தலைப்பு சிறப்பாக இருக்கிறது.

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா :

எல்லா விஷயங்களும் தோள் கொடுப்பவர் திருமலை. அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும். இந்த படம் சிறப்பாக உருவாகி இருகிறது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பாக எடுக்கபட்டு இருக்கிறது.

நடிகர் ரமேஷ் கண்ணா :

இந்த படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது. படத்தின் ஹீரோ சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா சிறப்பான இசையை கொடுத்துள்ளார். படம் எதிர்ப்பார்பை அதிகரித்து இருக்கிறது.

என இயக்குனரை பற்றி புகழ்ந்தும், படத்திற்கு அனைவரின் வாழ்த்துக்களை தெரிவித்தும் விழாவை சிறப்பித்தனர்.

Related post