உலக பைக் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட அஜித்!

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர்.

ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித், துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர் அஜித், இன்றுடன் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பைக் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விட்டதாக அவரது நண்பர் சுப்ரஜ் வெங்கட் அறிவித்துள்ளார்.

மேலும் உலக பைக் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இந்திய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது என குறிப்பிட்டு, உலக பைக் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் நிறைவடைந்தது என்றும் சுப்ரஜ் வெங்கட் குறிப்பிட்டிருக்கிறார்.

 

Related post