பத்து நிமிஷம்… 14 மொழி.. – மாஸ் காட்டும் கமல்!!

 பத்து நிமிஷம்… 14 மொழி.. – மாஸ் காட்டும் கமல்!!
Digiqole ad

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்தியன் 2.

கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேனாதிபதியாக இப்படத்திலும் கமல்ஹாசன் தொடர்கிறார்.

இந்தப் படத்தில் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய சிங்கிள் ஷாட் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதனை 14 மொழிகளில் கமல்ஹாசன் தானே பேசி நடித்திருப்பது சினிமாத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தசாவதாரம் படத்தில் 10 கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தது போல இந்தப் படத்தின் இக்காட்சி சாதனை படைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

அனிருத் இசையில் லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்…

Digiqole ad
Spread the love

Related post