நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம் – 3/5

 நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே விமர்சனம் – 3/5

இயக்கம்: பிரசாத் ராமர்

நடிகர்கள்: செந்தூர் பாண்டியன், ப்ரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா

ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்

இசை: பிரதீப் குமார்

தயாரிப்பாளர்: பிரதீப் குமார்

தயாரிப்பு நிறுவனம்: பூர்வா ப்ரொடக்‌ஷன்ஸ்

கதைப்படி,

மதுரையில் நாயகன் செந்தூர் பாண்டியன், தனது நண்பர்களோடு ஊர் சுற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் இருக்கும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்புவது, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றுவது என இருந்து வருகிறார் செந்தூர் பாண்டியன்.

அப்படியாக, செந்தூர் பாண்டியனுக்கு மாயவரத்தில் இருக்கும் நாயகி ப்ரீத்தி கரணிடம் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்படுகிறது. ப்ரீத்தி கரணுக்கு பிறந்தநாள் வர, தான் நேரில் வந்து வாழ்த்து தெரிவிப்பதாக கூறி, தனது நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து மாயவரம் பயணப்படுகிறார் நாயகன் செந்தூர்பாண்டியன்.

அங்கு சென்று ப்ரீத்தி கரணை அனுபவித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் செந்தூர் பாண்டியன். மாயவரத்தில் இருந்து, நாயகி ப்ரீத்தி கரணை பூம்புகார் அழைத்துச் செல்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாயகன் மற்றும் நாயகியை அம்மண்ணின் மணம் மாறாமல் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

சில வருடங்களுக்கு முன் சில இளைஞர்கள் எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குனர்.

பருவத்தில் இளைஞர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்பதை நாயகன் செந்தூர் பாண்டியன் தனது நடிப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.

நாயகி ப்ரீத்தி கரணும், மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க இளைஞர்கள் / இளைஞிகளை மையப்படுத்தியே இப்படம் உருவாகியிருப்பதால் ”ஏ” தர வசனங்களோடு கதை நகர்ந்து செல்கிறது.

தங்களுக்கு முன் ஒரு கேமரா இருக்கிறது என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து படத்தோடு ஒன்றி காணப்பட்டனர் நடித்த நடிகர்கள் அனைவரும்.

பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் அளவிற்கு நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர்.

18+ படமாக இருந்தாலும், படம் முடித்து வெளியே செல்லும் போது ஒரு மெசேஜை சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறார் இயக்குனர்.

பிரபல பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் நடுவில் ஒரு கிராமத்து குத்து பாடல் ஒன்றை சேர்த்திருந்திருக்கலாம். இசை கூடுதல் வலு சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். இரண்டாம் பாதி வசனங்கள் பெர்பெக்ட்.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – வொர்த்…

Related post