3 மில்லியன் பார்வைகளை கடந்த “ஏழு கடல் ஏழு மலை” பட க்ளிம்ப்ஸ்

 3 மில்லியன் பார்வைகளை கடந்த “ஏழு கடல் ஏழு மலை” பட க்ளிம்ப்ஸ்

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிக்க உருவாகி வரும் படம் தான் ஏழு கடல் ஏழு மலை.

நேற்று முன்தினம் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை யூ டியுப் தளத்தில் மட்டும் சுமார் 3.4 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது இந்த க்ளிம்ப்ஸ்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ராமின் இயக்கத்தில் இப்படம் வெளிவருவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

 

Related post