இன்று வெளியாகிறது அயலான் பட ட்ரெய்லர்

 இன்று வெளியாகிறது அயலான் பட ட்ரெய்லர்

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் அயலான்.

சில வருடங்களாகவே நடந்து வந்த போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் வரும் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி இப்படம் திரைகாண இருக்கிறது.

படத்திற்கான ப்ரொமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்று ட்ரெய்லர் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற இருக்கிறது.

இதுவரை கோலிவுட்டில் ஏலியன் சார்ந்த படங்கள் பெரிதாக இல்லாத போது, இப்படத்திற்கான எதிர்பார்ப்பு குழந்தைகள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.

இன்று மாலை படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.

Related post