ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது விமர்சனம்

 ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது விமர்சனம்

இயக்கம்: ரமேஷ் வெங்கட்

நடிகர்கள்: சத்யமூர்த்தி, விஜயகுமார், கோபி, சுதாகர், முனீஷ்காந்த், ஜார்ஜ் மரியன், ரித்விகா, ஹரிஜா, யாஷிகா ஆனந்த்.

ஒளிப்பதிவு: ஜோஸ்வா ஜே

இசை: கெளசிக் கிரீஷ்

கதைப்படி,

சினிமாவில் படம் எடுப்பதற்காக தயாரிப்பாளரை தேடி அலையும் நண்பர்கள் ஐந்து பேர். அதில், சத்யமூர்த்தி, விஜயகுமார், கோபி, சுதாகர் உள்ளிட்டோர் அடங்குவர்.

அதுபோல, பள்ளி படிக்கும் மூன்று மாணவர்கள். கணவனுக்கு தெரியாமல் கள்ள தொடர்பில் இருக்கும் பெண் மற்றும் கள்ள காதலன். அதுமட்டுமல்லாமல், நாயகிகள் ஹரிஜா மற்றும் யாஷிகா ஆனந்த்.

இவர்கள் அனைவரும் யதேச்சையாக அங்கு இருக்கும் ஒரு திரையரங்கு ஒன்றிற்குள் படம் பார்க்கச் சென்று விடுகின்றனர்.

அங்கு இருக்கும் அமானுஷ்யங்கள் இவர்களை தொடர்ச்சியாக பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. திரையரங்கை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் இருக்கிறது.
இறுதியாக அந்த திரையரங்கை விட்டு இந்த டீம் அனைவரும் தப்பித்தார்களா.? அந்த அமானுஷ்யம் யார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

யூ டியூப் பிரபலங்கள் பலர் தான் இப்படத்தில் நடித்துள்ளனர். குறும்படத்தில் ரசிக்க வேண்டிய காமெடிகள் பல இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் பெரிதாக எடுபடவில்லை.

பலகாமெடிகள் நம்மை சோதனைக்குள் தான் தள்ளுகின்றன. பின்னணி இசை படத்திற்கு பெரிதாக கைகொடுத்திருக்கிறது. பல இடங்களில் பயமுறுத்துகிறது. ஒளிப்பதிவு இன்னும் மிரட்டலை கொடுத்திருந்திருக்கலாம்.

ஆங்காங்கே நடிகர்கள் அனைவரும் ஓவர் ஆக்டிங்கை கொடுத்திருக்கிறாங்கள். காமெடிக்கான இடங்கள் பல இருந்தும் அதை அவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை.

நல்லதொரு கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை திரைக்கதையாக சரியாக கொடுக்க தடுமாறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

யூ டியூப் காமெடி கலாட்டாக்களை ரசிக்கும் ரசிகர்கள் ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம். –  2.5/5

Related post