படவேட்டு விமர்சனம்

நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன் நடிப்பில், லீஜு கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கும் படம் “படவேட்டு”. யூடல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.
கதைப்படி,
பா.ஜ.கவின் அரசியலை வெளிப்படையாக பேசி விமர்சிக்கும் படம் இது. விவசாயிகளுக்கான வேளாண் திட்டம். வயலுக்கு வெளி போடும் திட்டம். மண் வளம் மற்றும் உரம் வழங்கும் திட்டம். விளைந்து வரும் பயிர்கள் மற்றும் காய் கரிகளுக்கான விலை நிர்ணயிக்கும் திட்டம் என்பது போன்ற பல திட்டங்களின் உண்மையையும் பின்னணியையும் பேசியுள்ள படம் “படவேட்டு”.
கதையின் ஆரம்பம் என்று பார்த்தல், கேரளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓட்டப்பந்தய வீரனாக இருக்கிறார். ஆனால், ஒரு விபத்தின் காரணமாக அவரலான் எந்த வேலையும் செய்ய முடியாமல் வீட்டில் இருக்கிறார். அப்போது, திடீரென ஒரு நாள் ஷம்மி திலகனின் கட்சியினர் ஓட்டை உடைசலாக இருக்கும் நிவின் பாலியின் வீட்டை புதுப்பித்து தருகின்றனர். அந்த வீட்டின் முன் ஆதரவளிக்கப்பட்ட இல்லம் என்ற பலகையை வைக்கின்றனர் அக்கட்சியினர்.
கிராம மக்கள் அனைவரும் நிவினை கலாய்த்து தள்ள பொறுக்க முடியாத நிவின் அந்தப் பலகையை உடைத்தெறிகிறார். அதன் பின் கட்சிக்காரர்களுடனும் மோதல் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய பிரெச்சனையை நிவின் சமாளித்தாரா? கிராம மக்களை ஏமாற்றுவதற்காக ஷம்மி திலகன் போடும் திட்டங்கள் என்ன ஆனது? பா.ஜ.கவின் திட்டங்கள் எப்படி நாட்டை அழிக்க காத்திருக்கிறது? என்பதை வெளிப்படையாகவும் நேர்த்தியாகவும் நமக்கு சொல்லியிருக்கிறது இரண்டாம் பாதி.
வழக்கம் போல நிவின் பாலி எதார்தமாக நடித்துள்ளார். அவரின் உடல்மொழி படத்திற்கு பொருந்தியிருந்தது.
அதிதி பாலனுடனான காதல் காட்சிகள் மிகவும் அழகாக இருந்தது என்று சொல்லலாம்.
அதிதி பாலனுக்கு பெரிய அளவில் பாத்திர வலு இல்லை என்றாலும், கொடுத்த பாத்திரத்தில் நம்மை ரசிக்க வைத்து தான் சென்றார்.
லீஜு கிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் ஒன்றிய அரசை விமர்சிக்க பல இயக்குனர்கள் தயாராக இருந்தாலும். சென்சார் போர்டில் இருக்கும் அனைவரும் பா.ஜ.கட்சியினர் என்பதால் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வசனங்களை கட் செய்து விடுவார். இது தமிழ் படமாக இருந்திருந்தால் ஒன்று படம் வெளி வந்திருக்காது அல்லது 100 கட்டாவது இருந்திருக்கும்.
குறிப்பாக படத்தின் இறுதி காட்சியில் வரும் “என் வீடு, என் உரிமை”, “என் நிலம், என் உரிமை”, “என் நாடு, என் உரிமை” என்ற வசனம் கரகோஷங்களுக்கு உட்பட்டது.
படவேட்டு – ஒன்றியத்திற்கு வைக்கப்பட்ட வேட்டு. – (3/5)