போர் விமர்சனம்

 போர் விமர்சனம்

இயக்கம்: பிஜோய் நம்பியார்

நடிகர்கள்: அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டிஜே பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா ஸ்ரீநிவாசன், மெர்வின்

ஒளிப்பதிவு: Jimshi Khalid & Presley Oscar D’souza

இசை: Sanjith Hegde ,Dhruv Visvanath, Gaurav Godkhindi

பின்னணி இசை: Harish Venkat & Sachidanand Sankaranarayanan, Gaurav Godkhindi

தயாரிப்பு: T series, Getaway pictures, Roox media

தயாரிப்பாளர்கள்: T-Series, Bejoy Nambiar, Prabhu Antony, Madhu Alexander

கதைப்படி,

பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி தான் படத்தின் கதைக்களம். அந்த கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவராக வருகிறார் அர்ஜூன் தாஸ். அதே கல்லூரியை சேர்ந்தவர் சஞ்சனா நடராஜன். கல்லூரியில் அவ்வப்போது நீதிக்காக போராடும் கம்யூனிஸ்டாக வருபவர் நடிகை பானு.

அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக வந்து சேர்கிறார் காளிதாஸ். இவருக்கும் அர்ஜூன் தாஸுக்கு சிறு வயது மோதல் இருப்பதால், அர்ஜூன் தாஸை பழி தீர்க்க நினைக்கிறார் காளிதாஸ்.

அந்த நாளுக்காக காத்திருக்கிறார் காளிதாஸ். இதற்கிடையில், காதல், மோதல், கல்லூரி தேர்தல், தேர்தலில் அரசியல் என பல கோணங்களில் நகரும் கதை தான் படத்தின் மீதிக் கதை.

குரலில் மேஜிக் வைத்திருக்கும் அர்ஜூன் தாஸ், இப்படத்தின் கதைக்கான சரியான தேர்வு. இவர்மட்டுமல்லாமல், நாயகன் காளிதாஸும் சரியான தேர்வு தான். கலகலப்பாகவும், அவ்வப்போது சீரியஸாகவும் கொண்டு வந்து தனது கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் காளிதாஸ். தனக்கான உடல் மொழியிலும் பேச்சு மொழியிலும் தனித்து நிற்கிறார் அர்ஜூன் தாஸ்.

படத்தில் அனைத்து கதாபாத்திரத்தையும் ஓரங்கட்டும் விதமாக நடிப்பில் மிரள வைத்துவிட்டார் நாயகி சஞ்சனா நடராஜன். அக்கதாபாத்திரத்தோடு ஒன்றி, மிகவும் கேஷுவலாக வந்து நடிப்பில் மிளிர்ந்துவிட்டு சென்றிருக்கிறார் சஞ்சனா.

நாயகி பானுவும் தனக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாமல், படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை தங்களது உடல் மொழியில் பெர்பெக்டாக செய்து அதில் நன்றாகவும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது பின்னணி இசையும் பாடல்களும் தான். இளைஞர்களுக்கான பூஸ்டாக ஒவ்வொரு பாடல்களும் பின்னணி இசையும் இருந்தது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

கதையானது பல கட்டமாக நகர்ந்து செல்வதால், எதை நோக்கி பயணிக்கிறது என்ற குழப்பம் ஏற்படுகிறது. பாண்டிச்சேரி கதைக்களம் என்பதால் இயக்குனர் கதையை விட மதுவை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.

மது மட்டுமா போதை ஏற்றும் புகையிலையையும் அளவுக்கு அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். ஒரே ஷாட்டில் எடுப்பதாக கூறி பல இடங்களில் ஒளிப்பதிவு அவுட் ஆஃப் ஆனதை பார்க்க முடிந்தது.

இருந்தாலும் கல்லூரி இளசுகளிடையே இருக்கும் நட்பு, காதல், மோதல் என இவற்றையெல்லாம் வெளிச்சமாக காட்டியிருப்பதால் இளைஞர்களின் மத்தியில் சற்று வரவேற்புப் பெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

போர் – ஓகே தான்… – 3/5

Related post